உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கராத்தே உலக சாதனை நிகழ்வுக்கு முன்பதிவு

கராத்தே உலக சாதனை நிகழ்வுக்கு முன்பதிவு

சென்னை, உலக கராத்தே மாஸ்டர்கள் சங்கமும், கின்னஸ் உலக சாதனை அமைப்பும் இணைந்து, கராத்தே தற்காப்பு நுட்பங்களை ஒருங்கிணைத்து, உலக சாதனையை நிகழ்த்த முயற்சி மேற்கொண்டுள்ளன.இந்த நிகழ்வு, சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஜெயின் கல்லுாரியில், வரும் ஆக., 17ல் நடக்க உள்ளது. இதற்கு முன், சீனாவில், 7,800 வீரர் - வீராங்கனையரை வைத்து செய்த தற்காப்பு நிகழ்வு, உலக சாதனையாக உள்ளது.இதை முறியடிக்கும் வகையில், 9,000க்கு அதிகமான கராத்தே வீரர் - வீராங்கனையர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.இதில், தனி நபர் சாதனை மற்றும் குழு சாதனை என இரு பிரிவிலும் நிகழ்வு நடக்கவுள்ளது. இதற்கான முன்பதிவு நடந்து வருகிறது. பங்கேற்க விரும்புவோர், 98944 78300, 97909 94917 என்ற எண்களில், வரும் 15ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என, உலக கராத்தே மாஸ்டர்கள் சங்கம் அறிவித்துஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை