உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தொடரும் மின் பிரச்னை மயிலாப்பூர்வாசிகள் தவிப்பு

தொடரும் மின் பிரச்னை மயிலாப்பூர்வாசிகள் தவிப்பு

மயிலாப்பூர்:சென்னையில், 'மிக்ஜாம்' புயலின் காரணமாக, ஆங்காங்கே மின் பிரச்னை எழுந்தது. இதில் மயிலாப்பூர், வீரப்பெருமாள் பெருமாள் கோவில் தெரு, அப்பர்சாமி கோவில் தெரு, பங்காரம்மன் கோவில் தெரு, சிதம்பர சாமி தெரு ஆகிய பகுதிகளில், நிலத்திற்கடியில் புதைக்கப்பட்ட மின்வடம் சேதமடைந்தன.புயலுக்குப் பின், கடந்த டிசம்பர் மாதம், சில வீடுகளுக்கு மட்டும் மின் இணைப்பு முறையாக வழங்கப்பட்டது. மற்ற விடுகளுக்கு, மின் மாற்றியில் இருந்து ஒயர் எடுக்கப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.ஆனால் இதுவரை, அந்த தற்காலிக மின் இணைப்பு மட்டும் தான் உள்ளது. மின் ஒயர்கள் வெளியில் தெரிவதால், மின் கசிவு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது குறித்து, விவேகானந்தபுரம் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கூறியதாவது:மிக்ஜாம் புயலில், மின் பிரச்னை ஏற்பட்டது. புயலுக்குப் பின் சில வீடுகளுக்கு மட்டும் ஒயர்கள் சரிபார்க்கப்பட்டு, மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், இன்று வரை பல வீடுகளுக்கு, மின் மாற்றியில் இருந்து தற்காலிகமாக மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஒயர்கள் வெளியே தெரிவதால் அச்சமாக உள்ளது.தவிர, குறைந்த அழுத்த மின்சாரம் வருவதால் மின் சாதனங்களை உபயோகப்படுத்த முடிவதில்லை. மின் வாரியத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. அதிகாரிகள் கவனித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ