மேலும் செய்திகள்
ரவுடியை துரத்தி வந்து வெட்டிய 7 பேருக்கு வலை
23-Jun-2025
எம்.ஜி.ஆர்., நகர்:எம்.ஜி.ஆர்., கால்வாயில் 10 கோடி ரூபாய் செலவில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது.கோடம்பாக்கம் மண்டலம், கே.கே., நகரில் துவங்கி, அசோக் நகர், எம்.ஜி.ஆர்., நகர், பகுதிகள் வழியாக 1.7 கி.மீ., துாரம் செல்லும் எம்.ஜி.ஆர்., கால்வாய், அடையாறு ஆற்றில் கலக்கிறது.இந்த கால்வாயின் பல இடங்களில் தடுப்பு சுவர் இன்றி உள்ளது. இதனால், அப்பகுதி குடியிருப்புவாசிகள், கால்வாயில் குப்பையை கொட்டி வந்தனர். இதனால், நீரோட்டம் பாதிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, கால்வாயில் 800 மீட்டர் துாரத்திற்கு 10 கோடி ரூபாய் செலவில், 6 அடி உயரத்திற்கு தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
23-Jun-2025