உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / முதியவரை தாக்கிய ரவுடி கைது

முதியவரை தாக்கிய ரவுடி கைது

ஓட்டேரி, ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டை, சுப்புராயன் தெருவை சேர்ந்தவர் கணேசன், 60. இவர் நேற்று முன்தினம் வீட்டின் அருகே நடந்து சென்றபோது, மதுபோதையில் வந்த ஒருவர், கணேசனிடம் தகராறு செய்து, அவரை நெஞ்சில் தாக்கியுள்ளார். கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற கணேசன், தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.விசாரணையில், கணேசனை தாக்கிய, அதே பகுதியை சேர்ந்த ரவடி, பிரேம்குமார், 48 என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது, 27 குற்ற வழக்குகள் உள்ளன.**


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை