மேலும் செய்திகள்
ஸ்குவாஷ்: அனாஹத் 2வது இடம்
17-Aug-2025
ஸ்குவாஷ்: பைனலில் அனாஹத்
16-Aug-2025
பெரம்பூர், :இரட்டிப்பு லாபம் ஆசைகாட்டி, 10 லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர். பெரம்பூரைச் சேர்ந்தவர் ஷபியா, 34. இவரது கணவர் மூலம், கொடுங்கையூரில் பிளாஸ்டிக் நிறுவனம் நடத்தி வரும் பாடியநல்லுாரைச் சேர்ந்த முகமது பர்ஹதுல்லா, 37, என்பவர் அறிமுகமானார். இவர், ஷபியா விடம் தொழிலில் ஐந்து லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாதம் 25,000 ரூபாய் தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதை நம்பி, 2021 டிசம்பர் மாதம் ஷபியா, ஐந்து லட்ச ரூபாய் கொடுத்துள்ளார். துவக்கத்தில், ஓரிரு மாதங்கள் 25,000 ரூபாய் முகமது பர்ஹதுல்லா முறையாக கொடுத்துள்ளார். இதையடுத்து, 2022ம் ஆண்டு, மேலும் 5 லட்சம் ரூபாயை ஷபியா கொடுத்துள்ளார். ஆனால், அதன்பின் மாத தவணையை பர்ஹதுல்லா கொடுக்க வில்லை. அவரை தேடி சென்றபோது தலைமறைவானது தெரிய வந்தது. இது குறித்து 2023ம் ஆண்டு திரு.வி.க.நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டது. விசாரித்த போலீசார், இரண்டு ஆண்டுகள் தலைமறைவாக இருந்த முகமது பர்ஹதுல்லாவை, நேற்று முன் தினம் கைது செய்து சி றையில் அடைத்தனர்.
17-Aug-2025
16-Aug-2025