உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குப்பை பிரித்து கொடுத்தால் கிலோவிற்கு ரூ.10 சன்மானம்

குப்பை பிரித்து கொடுத்தால் கிலோவிற்கு ரூ.10 சன்மானம்

கோவிலம்பாக்கம், துாய்மை பாரத இயக்கம் சார்பில், பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோவிலம்பாக்கத்தில், நேற்று மதியம் 12:00 மணிக்கு, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.இதில், பிளாஸ்டிக் ஒழிப்பு, மீண்டும் மஞ்சப்பை, மக்கும், மக்காத குப்பை பிரித்தல் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, 500 அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் துாய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.தவிர, பிளாஸ்டிக் பொருட்களை பிரித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் கொடுத்தால், ஒரு கிலோவிற்கு 10 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என, துண்டு பிரசுரமும் வினியோகிக்கப்பட்டது.இந்நிகழ்வில், வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி தலைவர், ஆசிரியர்கள், அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை