மேலும் செய்திகள்
பிப்., முதல் வாரம் வள்ளலார் மாநாடு
2 minutes ago
மனநலம் குன்றிய 31 பேருக்கு வேலைவாய்ப்பு
4 minutes ago
உண்ணாவிரதம்: 6வது பெண் துாய்மை பணியாளர்கள் அட்மிட்
7 minutes ago
இன்று இனிதாக ... (10.12.2025) சென்னை
9 minutes ago
சென்னை: மகளிர் காவல் நிலையத்தில் அவமானத்திற்கு ஆளான பெண் மற்றும் அவரது தம்பிக்கு, 1.50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த வீரபாரதி தேவி என்பவர், தன் தம்பி விமல்ராஜ், வழக்கறிஞர்கள் ரேவதி, அசோக் ஆகியோருடன், 2021 பிப்., 16ல் சென்று, குடும்பத் தகராறு தொடர்பாக கணவர், உறவினர்கள் மீது, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத் தில் புகார் அளித்தார். துணை கமிஷனர் ஆலோசனையின்படி, தாம்பரம் மகளிர் காவல் நிலையம் சென்றனர். அங்கு, அவர்களுக்கு குடிநீர் கூட தராமல், கழிவறையை பயன்படுத்த அனுமதிக்காமல், போலீசார் மனித உரி மை மீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும், புகார் கொடுத்த தங்களை மிரட்டி, பொய் வழக்கு பதிவு செய்து , அத்துமீறலில் ஈடுபட்டதாக வீரபாரதி தேவி, விமல்ராஜ், அசோக் ஆகியோர், மாநில மனித உரிமை ஆணையத்தில் மனு அளித்தனர். மனுவை விசாரித்த ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் பிறப்பித்த உத்தரவு: வீரபாரதி தேவி, விமல்ராஜ் ஆகியோருக்கு எதிராக போலீசார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது ஆணைய விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. வீரபாரதி தேவியின் குற்றச்சா ட்டுகளுக்கு பதிலளிக்க காவல்துறை முன்வரவில்லை. எனவே, குற்றச்சாட்டுகளாகவே கருதப்படுகின்றன. எனவே, விமல்ராஜுக்கு, ஒரு லட்சம் ரூபாய், வீரபாரதி தேவிக்கு 50,000 ரூபாய் என, இழப்பீடாக, 1.50 லட்சம் ரூபாயை, நான்கு வாரங்களுக்குள் தமிழக அரசு வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
2 minutes ago
4 minutes ago
7 minutes ago
9 minutes ago