மேலும் செய்திகள்
குறைதீர் முகாமில் 52 மனுக்கள் ஏற்பு
20-Mar-2025
ஆவடி,ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில், பங்குச்சந்தை மற்றும் பகுதி நேர வேலைவாய்ப்பு உள்ளிட்ட 'ஆன்லைன்' மோசடி தொடர்பான புகார்கள் மீது, தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில், பிப்ரவரி, மார்ச் மாதங்களில், ஆவடி மத்திய சைபர் கிரைம் பிரிவில் 33 புகார்கள் வந்துள்ளன. இது குறித்து விசாரித்த போலீசார், பாதிக்கப்பட்டவர்கள் செலுத்திய வங்கி பரிவர்த்தனைகள் கொண்டு, சம்பந்தப்பட்ட வங்கி கிளைக்கு கடிதம் கொடுத்து, மோசடி நபர்களின் வங்கி கணக்குகளை முடக்கினர். மோசடி நபர்களின் வங்கி கணக்கில் இருந்து மீட்ட 4.71 கோடி ரூபாயை, ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் நடந்த நிகழ்ச்சியில், உரியவர்களிடம் கமிஷனர் சங்கர் நேற்று வழங்கினார்.
20-Mar-2025