உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தேஜஸ் ரயிலில் பயணி தவறவிட்ட ரூ.89,700 ஒப்படைப்பு

தேஜஸ் ரயிலில் பயணி தவறவிட்ட ரூ.89,700 ஒப்படைப்பு

சென்னை :தேஜஸ் விரைவு ரயிலில் பயணி தவறவிட்ட, 89,700 ரூபாயை மீட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர், பயணியிடம் ஒப்படைத்தனர்.எழும்பூர் ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று சோதனை செய்தனர். அப்போது, தேஜஸ் ரயிலில், கேட்பாடற்று பை ஒன்று கிடப்பதாக, ஊழியர்கள் தகவல் கொடுத்தனர். பாதுகாப்பு படையினர், அந்த பையை மீட்டு, சோதனை நடத்தியபோது, அதில், 89,700 ரூபாய் இருந்தது. பணத்தை ரயில்வே வணிக மேலாளரிடம் ஒப்படைத்தனர்.மதுரை சிம்மக்கல்லை சேர்ந்தவர் முரளி. இவர், மதுரையில் இருந்து நேற்று தேஜஸ் ரயிலில் பயணம் செய்துள்ளார். தாம்பரத்தில் இறங்கிய அவர், தவறுதலாக பையை மறந்து விட்டு சென்றுள்ளார்.தகுந்த சரிபார்ப்புக்குப்பின், பயணியிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது. ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை