மேலும் செய்திகள்
கண் பரிசோதனை முகாம்
04-Feb-2025
சென்னை, டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, கிரிக்கெட் வீரர்கள் சச்சின், கிளென் மெக்ராத் ஆகியோரை வைத்து, கண் பரிசோதனையின் முக்கியத்துவதை பற்றிய, விழிப்புணர்வு விளம்பரத்தை வெளியிட்டு உள்ளது.இந்த விளம்பரத்தில், சச்சின், மெக்ராத் ஆகியோர் கிரிக்கெட் பயணத்தை பற்றி பேசியவாறு, கண் பரிசோதனையின் அவசியம், கண் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வடிவமைக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை தலைமை வணிக அதிகாரி ஆயுஷ்மான் சிரனேவாலா கூறியதாவது:இந்த தொலைகாட்சி விளம்பரம், எங்கள்சேவைகளை விளம்பரப்படுத்துவதை தாண்டி, பார்வை நன்றாக தெரிந்தாலும், வழக்கமான கண் பரிசோதனையின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. கண்களை தவறாமல் பரிசோதிப்பது, கவனித்து கொள்வது பார்வையை மேம்படுத்த உதவும். இந்த நோக்கத்தில் இணைந்து பணியாற்றிய, சச்சின், மெக்ராத் ஆகியோருக்கு நன்றி.டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மற்றும் மூன்ஷாட் என்ற படைப்பு நிறுவனம், இந்த விளம்பரத்தை தயாரித்துள்ளது. இவற்றை, ராகுல் பாரதி இயக்கியுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.
04-Feb-2025