UPDATED : டிச 10, 2025 09:48 AM | ADDED : டிச 10, 2025 05:41 AM
அம்பத்துார்: குப்பையில் கிடந்த 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க கம்மலை, உரியவரிடம் ஒப்படைத்த துாய்மை பணியாளருக்கு பாராட்டு குவிகிறது. அம்பத்துார் மண்டலம், 82வது வார்டு, ஞானமூர்த்தி நகர், தேவசி தெருவைச் சேர்ந்தவர் கிரிஜா, 55. இவர் தன் வீட்டிலிருந்த குப்பையை, குப்பை சேகரிக்கும் பேட்டரி வண்டியில் கொட்டி சென்றுள்ளார். அந்த வாகனத்தை ஓட்டி வரும் நவீன்குமார், 34, என்பவர், பேட்டரி வண்டியில் கொட்டப்பட்ட குப்பையை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டபோது, அதிலிருந்த மாத்திரை பையில் ஒரு சவரன் தங்க கம்மல் இருப்பதை கண்டுபிடித்தார். உடனடியாக, தன் சூப்பர்வைசர் ஸ்ரீநாத் ஸ்ரீனிவாசனுடன் நேரில் சென்று, அதை கிரிஜாவிடம் ஒப்படைத்தார். துாய்மை பணியாளர் நவீன்குமாரின் நேர்மையை, பகுதிமக்கள் பாராட்டினர்.