உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் 

துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் 

பிராட்வே:துாய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம் சார்பில், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில், ராயபுரம், திரு.வி.க., நகர் மண்டலங்களில் துாய்மை பணியை, தனியார் நிறுவனத்திடம், மாநகராட்சி ஒப்படைத்துள்ளது. இதை கண்டித்தும், தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும், துாய்மை பணியாளர்கள், தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம் சார்பில், துாய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும்; அரசாணை அடிப்படையில் உயர்த்தப்பட்ட ஊதியத்தை வழங்க கோரியும், 50க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !