உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  பெருங்களத்துாரில் ரூ.1.89 கோடியில் அறிவியல் பூங்கா

 பெருங்களத்துாரில் ரூ.1.89 கோடியில் அறிவியல் பூங்கா

பெருங்களத்துார்: தாம்பரம் மாநகராட்சி, 4வது மண்டலம், பழைய பெருங்களத்துார், ஆர்.எம்.கே., நகரில் பூங்கா உள்ளது. இதை சுற்றியுள்ள மக்கள், விளையாட்டு மைதானமாகவும், முதியவர்கள், பெண்கள் நடைபயிற்சி செய்யும் இடமாகவும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், மாணவர்களின் வசதிக்காக, இப்பூங்காவில், 1.89 கோடி ரூபாய் செலவில், அறிவியல் பூங்கா அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அறிவியல், கணிதம், வேதியியல், இயற்பியல் புத்தகங்களில் உள்ள பாடங்களை, மாணவர்கள் செயல்முறை மூலம் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில், 72 உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. சில நாட்களில் இப்பணி முடிந்து, இப்பூங்கா பயன்பாட்டிற்கு வரும் என தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை