உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எண்ணுார் முதல் பூஞ்சேரி வரை 92 கி.மீ., துாரம்... கடல் வழி மேம்பாலம் மூன்று கட்டமாக ரூ.27,600 கோடியில் அமைக்க திட்டம்

எண்ணுார் முதல் பூஞ்சேரி வரை 92 கி.மீ., துாரம்... கடல் வழி மேம்பாலம் மூன்று கட்டமாக ரூ.27,600 கோடியில் அமைக்க திட்டம்

சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், சென்னை எல்லை சாலை திட்டப்பணிகள் துவங்கியுள்ள நிலையில், எண்ணுார் முதல் மாமல்லபுரம் பூஞ்சேரி வரை, 27,600 கோடி ரூபாயில், 92 கி.மீ., துாரத்தில் கடல் மார்க்கமாக, 'இ.சி.ஆர்., கடல்வழி மேம்பாலம்' அமைக்க, மாநில நெடுஞ்சாலை ஆணை யம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க, 3.80 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், தொழில் நிறுவனங்கள் பெருகி வருவதால், வெளி மாநிலம், தமிழகத்தின் இதர மாவட்டங்களில் இருந்து, வேலை தேடி வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால், வாகன போக்குவரத்து அதிகரிப்பதால், தற்போதுள்ள சாலைகளை அகலப்படுத்துவது மற்றும் புதிய சாலைகளை உருவாக்குவதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. சென்னையை பொறுத்தமட்டில், வண்டலுார் - மீஞ்சூரை இணைக்கும் வகையில், 62 கி.மீ., துார வெளிவட்ட சாலை, சாலை மேம்பாட்டு நிறுவனம் பராமரிப்பில் உள்ளது.பெருங்களத்துார் - புழல் பகுதியை இணைக்கும் வகையில், 32 கி.மீ., துாரத்தில் உள்ள சென்னை பைபாஸ் சாலை, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் உள்ளது.மேலும், மணலி முதல் கோயம்பேடு வழியாக வேளச்சேரி வரை, 25 கி.மீ., உள்வட்ட சாலை, மாநில நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ளது. இந்த சாலைகள், சென்னையில் உள்ள அனைத்து வழித்தடங்களையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளன.அதேபோல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தை இணைக்கும் வகையில், எண்ணுார் முதல் தச்சூர், தண்டலம், ஸ்ரீபெரும்புதுார், சிங்கபெருமாள்கோவில் வழியாக, மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி வரை, 133 கி.மீ., துாரத்தில் சாலை மார்க்கமாக ஆறு வழி 'சென்னை எல்லை சாலை' திட்டம் துவக்கப்பட்டுள்ளது. ஐந்து பிரிவுகளாக பிரிந்து பணி நடைபெற உள்ள நிலையில், மூன்று பிரிவுகளுக்கு, 2,700 கோடி ரூபாயில் பணி துவங்கியது.

புது திட்டம்

இந்நிலையில், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தை இணைக்கும் வகையில், எண்ணுார் முதல் பூஞ்சேரி வரை, 92 கி.மீ., துாரத்தில் கடல் வழி சாலை அமைக்க, தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுஉள்ளது. இத்திட்டத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க, 3.80 கோடி ரூபாய் தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. இது தொடர்பாக நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இத்திட்டத்திற்கு தோராயமாக, 27,600 கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இச்சாலைக்கு, 'இ.சி.ஆர்., கடல்வழி மேம்பாலம்' என பெயரிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், இ.சி.ஆர்., என்ற கிழக்கு கடற்கரை சாலை முக்கிய வழித்தடமாக உள்ளது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை இடையே, சாலையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு, மாமல்லபுரம் முதல் நாகப்பட்டினம் வரை நான்குவழி சாலை பணிகள் நடந்து வருகின்றன.நாகப்பட்டினத்தில் இருந்து கன்னியாகுமரி வரை அகலப்படுத்தப்பட உள்ளது. இதனால், சென்னை மற்றும் துாத்துக்குடி துறைமுகங்கள் முன்னேற்றம் ஏற்படுவதுடன், கடலோரப் பகுதிகளின் வளர்ச்சி அதிகரிக்கும்.மேலும், சென்னை - திருச்சி, சென்னை - சேலம் பசுமை வழி சாலைகள் அமைக்க உள்ளதுடன், இந்த சாலைகளை மதுரை வழியாக துாத்துக்குடி வரை நீட்டிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த வழித்தடங்களுக்கு, இ.சி.ஆர்., கடல்வழி மேம்பாலம் மிகவும் பயனளிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்வளம் பெருகும்

இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கடலோர பகுதியில் அமைப்பதால் கடல்வளம் பாதிக்காத வகையில், புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மேம்பாலம் அமைக்கும் வகையில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்படும். இச்சாலை, கடல்வழி மேம்பாலமாக அமைப்பதால், கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மீன்வளம், மீனவர்கள் நலனை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு, கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதல் தேவை. ஏற்கனவே, பல நாடுகளிலும், மும்பையிலும் கடல்வழி மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. அதை முன்னுதாரணமாக எடுத்து, இ.சி.ஆர்., கடல்வழி மேம்பாலம் அமைக்க திட்டமிட்டுள்ளோம். இச்சாலையால், துறைமுகங்களில் சரக்கு கப்பல் போக்குவரத்து அதிகரிப்பதுடன், தொழில் வளம் பெருகும். சென்னை சாலைகளில் வாகன நெரிசல் கணிசமாக குறையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மூன்று கட்ட பணிகள்

மதிப்பீடு விபரம் (கோடி ரூபாய்)முதற்கட்டம் 5,4002ம் கட்டம் 9,0003ம் கட்டம் 13,200மொத்தம் 27,600

ரேடியல் சாலையை இணைக்க முடிவு

எண்ணுார் முதல் பூஞ்சேரி வரை அமைய உள்ள இ.சி.ஆர்., கடல்வழி மேம்பாலத்துடன், சென்னை துறைமுகம் மற்றும் பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கூடுதலாக, ஏதாவது சாலைகளை இணைக்க முடியுமா எனவும் ஆய்வு செய்ய உள்ளனர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

panneer selvam
ஜூன் 18, 2025 17:55

Just paper planning to spread feel good feelings . Nothing else . Tamilnadu government is nearly bankrupt despite of borrowing one lakh crores from Bank every year . Looting and Freebie nearly kill Tamilnadu economy


rama adhavan
ஜூன் 18, 2025 17:02

இப்போது தான் திட்ட அறிக்கை வேலை துவங்க உள்ளது. அது முடிந்து, மத்திய அரசு ஒப்புதல் வாங்கி, டெண்டர் விட்டு வேலை துவங்க வேண்டும். இதற்கு எல்லாம் ஒரு 10,15 வருடம் ஆகும். இந்த ஆட்சியின் இறுதி ஆண்டில் விளம்பரதிருக்காக அறிவிப்பு செய்யப்பட்டது போல் தெரிகிறது. பார்க்கலாம் அத்தைக்கு மீசை வளர்ந்து சித்தப்பா ஆகிறாரா என்று..


Ramesh Trichy
ஜூன் 18, 2025 10:31

This bridge is very important and it has been under discussion for the last 10 years.. We need to have good infrastructure to compete with states like Karnataka, Maharashtra, Gujarat, and Uttar Pradesh, etc.. Now, Telangana and Andhra are also in the game.


vns
ஜூன் 18, 2025 07:50

ரூ 27,000 கோடி ரூ 50,000 கோடி ஆக மாறும். அதில் 20% சுமார் ரூ 10,000 கோடி திமுக மற்றும் அதன் தலைவர்களுக்கு . இனி திமுக ஆட்சிதான் அடுத்த 100 ஆண்டுகளுக்கு.


Kanns
ஜூன் 18, 2025 06:48

Useless/UnWanred/Easily Damageable Mega SeaBridges are Planned Only for MegaLoots. Instead So Many UnConnected Villages Must be Connected by Roads & Public Transports


Mani . V
ஜூன் 18, 2025 05:50

தீர்க்காயுசு பவ. தரைப்பாலமே திறப்பு விழாவுக்கு முன்பே உள்வாங்கி விடுகிறது. தடுப்பணை சிறிய மழைக்கே தண்ணீருடன் போய் விடுகிறது. இது என்ன ஆகுமோ? எது எப்படியோ "அப்பா" குடும்பத்துக்கு லம்பா ஒரு அமௌண்ட் கிடைத்து விடும்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 18, 2025 11:25

எப்போவுமே விடையில் இருந்து வினாவுக்கு போவீர்களோ ? அப்பா" குடும்பத்துக்கு லம்பா ஒரு அமௌண்ட் கிடைக்கறதுக்காகத்தானே இந்த மாதிரி திட்டங்களே கொண்டுவர்றது


சமீபத்திய செய்தி