உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பறிமுதல் வாகனங்கள் 21ம் தேதி ஏலம்

பறிமுதல் வாகனங்கள் 21ம் தேதி ஏலம்

ஆவடி, ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில், மதுவிலக்கு அமலாக்க பிரிவு வழக்கில், 3 இருசக்கர வாகனம், மூன்று மற்றும் நான்கு வாகனங்கள், தலா ஒன்று என மொத்தம் ஐந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வாகனங்கள், ஆவடி ஆயுதப்படை மைதானத்தில், வரும் 21ம் தேதி காலை 10:00 மணியளவில் ஏலம் விடப்பட உள்ளன.ஏலம் கேட்க வருபவர்கள், இருசக்கர வாகனங்களுக்கு 1,000 ரூபாய், மூன்று சக்கர வாகனங்களுக்கு 2,000 ரூபாய் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 5,000 ரூபாய் வைப்பு தொகையாக செலுத்த வேண்டும்.அதற்கான 'டோக்கன்' அன்று காலை 8:00 மணி முதல் 10:00 மணி வரை வழங்கப்படும். ஏலத்தில் பங்கேற்போர், அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் அடையாள சான்று கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ