உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மலை மண் எடுத்து வந்த லாரி பறிமுதல்: ஓட்டுனர் கைது 

மலை மண் எடுத்து வந்த லாரி பறிமுதல்: ஓட்டுனர் கைது 

சென்னை, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு, இரவு நேரங்களில் வெளி மாவட்டங்களில் இருந்து லாரிகளில் மணல் கடத்தப்படுவதாக கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, புவியியல் மற்றும் கனிம வளத்துறை உதவி இயக்குனர் சுகுணா, சிறப்பு உதவி தாசில்தார் அண்ணாமலை உள்ளிட்ட அதிகாரிகள், போரூர் சுங்கச்சாவடி அருகே நேற்று முன்தினம் இரவு சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியாக மண் ஏற்றி வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர். முறையான ஆவணங்கள் இன்றி, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் இருந்து மாதவரம் நோக்கி 9 யூனிட் மண் லாரியில் எடுத்து செல்லப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்து, தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் சந்தோஷ், 26 என்பவரை மதுரவாயல் போலீசாரிடம் கனிமவளத்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.மதுரவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை