செங்கை, திருவள்ளூர் சிறுவர்கள் மாநில சதுரங்கத்தில் அசத்தல்
சென்னை:'ஏ மேக்ஸ்' அகாடமி சார்பில், சிறுவர்களுக்கான மாநில சதுரங்க போட்டி, இரு தினங்களுக்கு முன், கொரட்டூரில் உள்ள பக்தவத்சலம் வித்யாஷ்ரம் பள்ளியில் நடந்தது. இதில், எட்டு வயது சிறுவரில், சென்னை மித்ரன், சிறுமியரில் காஞ்சிபுரம் யாஷிகா முதலிடம் பிடித்தனர். பத்து வயது சிறுவரில், செங்கல்பட்டு சாய் ஆகாஷ், சிறுமியரில் கடலுார் பிரகதா முதலிடம் பிடித்தனர். அதேபோல், 12 வயது சிறுவரில், திருவள்ளூர் தீபக் சேரன், சிறுமியரில் சென்னை கனிஷ்கா ஜெகதீஷ் ஆகியோர் முதலிடம் பிடித்தனர். 15 வயது சிறுவரில், திருவள்ளூர் இனியன், சிறுமியரில் சென்னை தீவிதா முதலிடம் பிடித்தனர். அதேபோல், 20 வயது ஆண்களில் ராணிப்பேட்டை தர்ஷன், பெண்களில் சென்னை கீர்த்தனா ஆகியோர் வெற்றி பெற்றனர். போட்டியில் முதலிடம் பிடித்த வீரர் - வீராங்கனையருக்கு, செஸ் விளையாட்டில் பயன்படுத்தும் கடிகாரம் பரிசாக வழங்கப்பட்டது. முதலிடம் பிடித்தவர்களை விட, ஒரு புள்ளி வித்தியாசத்தில், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை வீரர் - வீராங்கனையரே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களையும் கைப்பற்றினர்.