உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மழைநீர் வடிகால்வாய் பணியால் போரூர் ஏரியில் கலக்கும் கழிவுநீர்

மழைநீர் வடிகால்வாய் பணியால் போரூர் ஏரியில் கலக்கும் கழிவுநீர்

அய்யப்பன்தாங்கல்: சென்னைக்கு அருகே அய்யப்பன்தாங்கல் ஊராட்சி உள்ளது. மொத்தம், 15 வார்டுகள் கொண்ட அந்த ஊராட்சியில், 25,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அங்கு மழைநீர் வடிகால்வாய், பாதாளச் சாக்கடை வசதி இல்லை. இதனால், ஒவ்வொரு ஆண்டு மழைக்கும், அய்யப்பன்தாங்கல் ஊராட்சி முழுதும் பாதிக்கப்படும். குறிப்பாக, அய்யப் பன்தாங்கல் இ.வி.பி., பிரபு அவென்யுவில் உள்ள 1, 2, 3வது சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, அப்பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டது. அதை, அய்யப்பன்தாங்கல் யூனியன் சாலையில் உள்ள மழைநீர் வடிகாலில் இணைக்கப்பட்டது. இதற்காக, அய்யப்பன்தாங்கல் யூனியன் சாலையில் உள்ள சிறிய மழைநீர் வடிகால்வாயை உடைத்து, பெரிய மழைநீர் வடிகால்வாயாக அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக கால்வாயின் நீரோட்டம் தடை செய்யப்பட்டது. இந்த நிலையில்ல கால்வாயில் வரும் கழிவுநீர், தனியார் நிலம் வழியாக, போரூர் ஏரியில் செல்லும் வரத்து கால்வாயான தந்தி கால்வாயில் கலந்து வருகிறது. இதனால், சென்னையின் நீர் ஆதாரமான போரூர் ஏரியில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால், போரூர் ஏரி நீர் மாசடையும் நிலைமை ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி