உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புகார் பெட்டி சுரங்கப்பாலத்தில் கழிவுநீர் வழிந்தோடுவதால் சிரமம்

புகார் பெட்டி சுரங்கப்பாலத்தில் கழிவுநீர் வழிந்தோடுவதால் சிரமம்

சுரங்கப்பாலத்தில் கழிவுநீர் வழிந்தோடுவதால் சிரமம்

அண்ணா நகர் மண்டலம் வில்லிவாக்கத்தில் மாநகராட்சி சுரங்கப்பாலம் உள்ளது. இதில், ராஜமங்கலம், கொளத்துார் செல்லும் பாதையும், ராஜமங்கலத்தில் இருந்து, வில்லிவாக்கம் செல்லும் பாதையும் உள்ளது.தினமும் ஆயிரக்கணக்கானோர் செல்லும் நிலையில், சுரங்கப்பாலத்தின் இருபுற சுவர்களில், ஆங்காங்கே கழிவுநீர் வழிந்தோடுகிறது. 24 மணி நேரமும் அப்பகுதியில் சீர்கேடு நிலவுகிறது. போதிய பராமரிப்பு இல்லாததால், துர்நாற்றம் வீசுகிறது.இதற்கு மாநகராட்சி, ரயில்வே மற்றும் குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், அப்பகுதி முழுதும் தொற்றுநோய் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதற்கு தீர்வு காண வேண்டும்.ரங்கராஜன்,வில்லிவாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ