மேலும் செய்திகள்
பைக்கில் சென்றவர் மயங்கி விழுந்து சாவு
16-Nov-2024
தாம்பரம்: செங்கல்பட்டு மாவட்டம், நல்லுார் கிராமத்தை சேர்ந்தவர் குமார், 59. கூடுவாஞ்சேரி போக்குவரத்து காவல் பிரிவில், உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். நவ., 16ல், கூடுவாஞ்சேரி அருகே ஜி.எஸ்.டி., சாலையில், நெல்லிக்குப்பம் சந்திப்பில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திடீரென மயங்கி விழுந்து சுயநினைவு இழந்தார்.அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின், மேல் சிகிச்சைக்காக கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி, நேற்று இறந்தார்.
16-Nov-2024