சார் - பதிவாளர் அலுவலகத்தில் புகுந்த பாம்பு
திருவொற்றியூர்: சார் - பதிவாளர் அலுவலகத்தில் புகுந்த, 6 அடி நீள சாரை பாம்பை, தீயணைப்பு துறையினர் லாவகமாக பிடித்தனர். திருவொற்றியூர் அடுத்த விம்கோ நகரில் சார் - பதிவாளர் அலுவலக வளாகத்திற்குள், நேற்று முன்தினம் மாலை, திடீரென பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதை பார்த்த ஊழியர்கள், திருவொற்றியூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சார் - பதிவாளர் அலுவலகத்தில் பதுங்கியிருந்த 6 அடி நீள சாரை பாம்பை, தீயணைப்பு துறையினர் லாவகமாக பிடித்தனர். அந்த பாம்பு, வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.