மேலும் செய்திகள்
டி.ஐ.ஜி. பேர் சொல்லி 'கல்லா' கட்டும் 'கில்லாடி'
04-Nov-2025
சென்னை: கோமல் தியேட்டர் சார்பில் இயக்கப்பட்ட 'சிவசங்கரி' நாடகம், மீண்டும் இம்மாதம் 28ம் தேதி, ஆர்.ஆர். சபாவில் அரங்கேற்றம் செய்யப்பட உள்ளது. தமிழ் நாடக உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் கோமல் சுவாமி நாதன். அவர் மகள் தாரிணி கோமலால், 13 ஆண்டுகளுக்கு முன், 'கோமல் தியேட்டர்' நிறுவப்பட்டது. கோமல் அவர்களின் 'தண்ணீர் தண்ணீர்' உட்பட சில 'கிளாசிக்' நாடகங்களும், தாரிணி கோமல் எழுதிய 'அவள் பெயர் சக்தி, ரவுத்திரம் பழகு' உட்பட பல்வேறு சமூக மற்றும் வரலாற்று நாடகங்கள், கோமல் தியேட்டர் வாயிலாக மேடைகளில் அரங்கேற்றம் செய்யப் பட்டுள்ளன. படைப்பாளிகளைப் போற்றுவோம் என்ற கருத்தில், தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு, நாடக வடிவம் கொடுத்து, தாரிணி கோமல் அரங்கேற்றி வருகிறார். அதன்படி, தி. ஜானகிராமன், சுஜாதா, சூடாமணி, இந்திரா பார்த்தசாரதி உள்ளிட்டோரின் படைப்புகள் மேடைகளில் அரங்கேற்றம் செய்யப் பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, எழுத்தாளர் சிவசங்கரியின் ஆறு சிறுகதைகளுக்கு, நாடக வடிவம் கொடுத்து, தாரிணி கோமல் இயக்கி உள்ளார். கடந்த மாதம் அரங் கேற்றம் செய்யப்பட்ட, 'சிவசங்கரி' நாடகம், மீண்டும் சென்னையில் அரங்கேற்றம் செய்யப்பட உள்ளது. மயிலாப்பூர் ஆர்.ஆர்., சபாவில் வரும் 28ம் தேதி நடக்கும் நிகழ்ச்சியை காண, பொதுமக்கள், நுழைவுச் சீட்டை, 'புக்மை ஷோ'வில் பெறலாம்.
04-Nov-2025