உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தென் மண்டல கபடி போட்டி தமிழக பல்கலை அணிகள் வெற்றி விளையாட்டு செய்திகள்

தென் மண்டல கபடி போட்டி தமிழக பல்கலை அணிகள் வெற்றி விளையாட்டு செய்திகள்

சென்னை, தென் மண்டல பல்கலைகளுக்கு இடையேயான கபடி போட்டியில், தமிழக பல்கலை அணிகள் வெற்றி பெற்று அசத்தி வருகின்றன. இந்திய பல்கலைகள் சங்கங்கள் மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலை சார்பில், தென் மண்டல அளவில், பல்கலைகளுக்கு இடையிலான கபடி போட்டி, காட்டாங்கொளத்துாரில் உள்ள பல்கலை வளாகத்தில் நடக்கிறது.போட்டியில், தமிழகம் உட்பட தென் மண்டல அளவிலான, 100க்கும் மேற்பட்ட பல்கலை அணிகள் பங்கேற்று, 'நாக் - அவுட்' முறையில் மோதி வருகின்றன. நேற்று காலை நடந்த நாக் அவுட் சுற்றில், மதுரை காமராஜர் பல்கலை அணி, 37 - 32 என்ற கணக்கில், வி.எஸ்.கே., பல்கலை அணியையும்; வேல்டெக் பல்கலை அணி, 26 - 12 என்ற கணக்கில், குல்பர்கா பல்கலையை அணியையும் வீழ்த்தின.பாரதிதாசன் பல்கலை அணி, 43 - 22 என்ற கணக்கில் மத்திய பல்கலையும்; தமிழ்நாடு விளையாட்டு பல்கலை அணி, 33 -10 என்ற கணக்கில், தும்கூர் பல்கலை அணியை தோற்கடித்தன. அண்ணாமலை பல்கலை அணி, 47 - 31 என்ற கணக்கில், ஜாய் பல்கலையை வீழ்த்தி வெற்றி பெற்றது.அமிட் பல்கலை அணி, 27 - 9 என்ற கணக்கில,் ராய்ச்சூர் பல்கலை அணியை தோற்கடித்து வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை