குரோம்பேட்டை ஐ.டி.ஐ.,யில் ஜன., 3ல் சிறப்பு முகாம்
சென்னை: குரோம்பேட்டையில் உள்ள ஐ.டி.ஐ.,யில், ஜன., 3ல் தொழிற்பயிற்சிக்கான சிறப்பு முகாம் நடக்கும் என, மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிக்கை: குரோம்பேட்டையில் உள்ள ஐ.டி.ஐ., வளாகத்தில், 2026 - 27 ஆண்டிற்கான தொழில் பழகுநர் பயிற்சிக்கு தேர்வு செய்யும் வகையில், ஜன., 3ம் தேதி காலை 10:00 மணிக்கு சிறப்பு முகாம் நடக்கிறது. இதில் தேர்வாகும் மாணவர்களுக்கு, மெக்கானிக் மோட்டார், மெக் கானிக் டீசல் உள்ளிட்ட பிரிவுகளில், ஒரு ஆண்டுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி காலத்தில், மாதந்தோறும் 14,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.