உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வடகுருஸ்தலத்தில் நாளை குருபெயர்ச்சி சிறப்பு வழிபாடு

வடகுருஸ்தலத்தில் நாளை குருபெயர்ச்சி சிறப்பு வழிபாடு

திருவொற்றியூர், திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி - வடிவுடையம்மன் கோவில் அருகே, தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது. வடக்கு முகமாக சுவாமி எழுந்தருளி இருப்பதால், இக்கோவில் வடகுருஸ்தலம் என்றழைக்கப்படுகிறது.குருபெயர்ச்சியை ஒட்டி, நாளை கோவிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இன்று காலை 9:00 - 12:00 மணி வரை மற்றும் 5:00 - 8:00 லட்சார்ச்சனை நடைபெறும்.நாளை முற்பகல் 11:00 மணியளவில், குரு ஹோரையில், குரு பகவான் வேள்வி துவங்குகிறது. மதியம் 1:19 மணி வரை, கணபதி ஹோமம், குருபெயர்ச்சி பரிகார ஹோமம், மகா தீபாராதனை நடக்கும். வரும் 12ம் தேதி காலை 9:05 - 12:00 மணி வரை ருத்ராபிஷேகமும், மாலை 5:00 - 8:00 மணி வரை லட்சார்ச்சனையும் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை