உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விபத்து நடந்த இடத்தில் வேகத்தடை அமைப்பு

விபத்து நடந்த இடத்தில் வேகத்தடை அமைப்பு

சென்னை, சென்னையில் விபத்து நடந்த இடங்களில், மீண்டும் விபத்து நடக்காத வகையில், தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி, போக்குவரத்து போலீசாருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டு இருந்தனர்.அதன்படி, தற்போது சாலை விபத்து ஏற்பட்ட இடங்களில், மீண்டும் விபத்து ஏற்படாத வண்ணம் வேகத்தடை, எச்சரிக்கை பதாகைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.குறிப்பாக, திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில், இரு தினத்திற்கு முன் ஓமந்துாரார் மருத்துவக்கல்லுாரி அருகே சாலையை கடக்க முயன்ற வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வளர்மதி, 35, என்பவர், பி.எம்.டபிள்யூ., கார் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.இதையடுத்து, தற்போது அவ்விடத்தில் போக்குவரத்து போலீசார் வேகத்தடை அமைத்துள்ளனர். மேலும், வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளதை வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ளும் வகையில், பதாகையும் அமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை