| ADDED : நவ 22, 2025 03:56 AM
சிறுகளத்துார் அணி ஜூனியர் கால்பந்தில் பங்கேற்க தகுதி அ னைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பு சார்பில், 14, 16, 17 வயதுக்கு உட்பட்ட பிரிவினருக்கான ஜூனியர் லீக் போட்டி, இந்திய அளவில் நடைபெற உள்ளது. இதற்கான தகுதிச்சுற்றுக்கு, 14 வயது பிரிவினருக்காக போட்டி, குன்றத்துார் அருகே சிறுகளத்துாரில் உள்ள அம்பேத்கர் கால்பந்து மைதானத்தில், இரு நாட்களுக்கு முன் நடந்தது. இதில், சிறுகளத்துார் எப்.சி., அணி, முருகப்பா கால்பந்து அகாடமி அணியை, 2 - 1 என்ற கோல் கணக்கில் வென்று, தகுதி பெற்றது. காவல் துறையில் வீரர்கள் தேர்வு த மிழக காவல் துறையில், 3 சதவீத இட ஒதுக்கீட்டில், விளையாட்டு வீரர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதற்கான ஆட்கள் தேர்வு முகாம், பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. 55 ஆண்கள், 23 பெண்கள் என, 78 பேர் பங்கேற்றனர். முதற்கட்ட தேர்வுக்கு, 65 வீரர் - வீராங்கனையர் தகுதி பெற்றனர். வரும் 23ம் தேதி, எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் நடக்கவுள்ள அடுத்தகட்ட முகாமில் பங்கேற்க உள்ளனர்.