உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கால்பந்து லீக் நந்தனம், சைதை அசத்தல்

கால்பந்து லீக் நந்தனம், சைதை அசத்தல்

சென்னை, சசென்னை, கீழ்ப்பாக்கம், எஸ்.டி.ஏ.டி., நேரு பூங்கா மைதானத்தில், தனியார் நிறுவனர் சார்பில், சி.கே.எல்., எனும் சென்னை கால்பந்து 'லீக் சீசன் - 4' தொடர் நடக்கிறது. அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளிலிருந்து இருபாலரிலும் 36 அணிகள் பங்கேற்றுள்ளன. நேற்று காலை நடந்த மாணவர்களுக்கான முதல் போட்டி, நந்தனம் அரசு பள்ளி மற்றும் சைதாப்பேட்டை அரசு பள்ளி அணிகள் மோதின. அதில், 1 - 0 என்ற கணக்கில் சைதாப்பேட்டை அணி வெற்றி பெற்றது.சிறுமியருக்கான ஆட்டத்தில், நந்தனம் அரசு பள்ளி மற்றும் சைதாப்பேட்டை அரசு பள்ளிகள் மோதின. விறுவிறுப்பான ஆட்டத்தில், 2 - 0 என்ற கோல் கணக்கில், நந்தனம் அரசு பள்ளி அணி வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை