உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கைப்பந்தில் எஸ்.ஆர்.எம்., சாம்பியன்

கைப்பந்தில் எஸ்.ஆர்.எம்., சாம்பியன்

சென்னை, நாதெள்ளா குழுமம் சார்பில், அகில இந்திய பெண்கள் கைப்பந்து போட்டி, விஜயவாடா, கானுாரில் நடந்தது.நான்கு நாட்கள் நடந்த இப்போட்டியில், ஆறு அணிகள் பங்கேற்றன.ஒவ்வொரு 'லீக்' போட்டியிலும் எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி வீராங்கனையர், தனித்துவ ஆட்டத்திறனை வெளிப்படுத்தி, இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.விறுவிறுப்பான இறுதி 'லீக்' போட்டியில், பாங்க் ஆப் மஹாராஷ்டிரா அணியை எதிர்த்து ஆடிய எஸ்.ஆர்.எம்., அணியினர், அந்த ஆட்டத்தை 25 -- 16, 25 -- 22, 25 -- 22 என்ற புள்ளிக் கணக்கில் வென்று, 'சாம்பியன்' பட்டத்தை கைப்பற்றினர்.தமிழ்நாடு உடற்கல்வி பல்கலை, பாங்க் ஆப் மஹாராஷ்டிரா அணிகள் முறையே இரண்டாம், மூன்றாம் இடத்தை வென்றன. சிறந்த வீராங்கனையாக, எஸ்.ஆர்.எம்., பல்கலையின் கோபிகா தேர்ந்தெடுக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை