உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எஸ்.ஆர்.எம்., ஆடவர் அணி கபடியில் சாம்பியன்

எஸ்.ஆர்.எம்., ஆடவர் அணி கபடியில் சாம்பியன்

சென்னை, அபிமன்யூ ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், மாநில அளவில் கபடி சாம்பியன்ஷிப் போட்டி, துாத்துக்குடி கொளத்துாரில் நேற்று முன்தினம் நடந்தது.முதல் காலிறுதி போட்டியில், மணப்பாறை கிளப் அணியை 30 - 13 என்ற புள்ளியில் வீழ்த்திய சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை ஆடவர் அணி, 15 - 29 என்ற புள்ளியில் துாத்துக்குடியின் தருண் பிரதர்ஸ் கிளப் அணியை, அரைஇறுதியில் வீழ்த்தியது.நேற்று முன்தினம் நடந்த இறுதிப் போட்டியில் எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி 16 - 11 என்ற புள்ளி கணக்கில் துாத்துக்குடி மாவட்டக் கபடி அணியை வீழ்த்தி, தங்கப்பதக்கத்துடன் 'சாம்பியன்' பட்டத்தை கைப்பற்றியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை