உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  சர்வதேச பேட்மின்டன் போட்டி எஸ்.ஆர்.எம்., மாணவர்கள் சாம்பியன்

 சர்வதேச பேட்மின்டன் போட்டி எஸ்.ஆர்.எம்., மாணவர்கள் சாம்பியன்

சென்னை: தெ லுங்கானா மாநிலத்தில் நடந்த சர்வதேச பேட்மின்டன் போட்டியில், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை வீரர்கள் ரேஷிகா மற்றும் சத்விக் ரெட்டி ஜோடி, 'சாம்பியன்' பட்டம் வென்று அசத்தியது. இந்திய பாட்மின்டன் சங்கம், தெலுங்கானா மாநில பேட்மின்டன் சங்கம் சார்பில் 'இந்தியா இன்டர்நேஷனல் சேலஞ்ச் பேட்மின்டன் - 2025' போட்டி, ஹைதராபாத்தில் உள்ள ஜி.எம்.சி., பாலயோகி விளையாட்டு வளாகத்தில் நவ., 4 முதல் 9ம் தேதி வரை நடந்தது. இதில் 10 நாடுகளைச் சேர்ந்த 64 அணிகள் பங்கேற்றன. இதில் சென்னையின் எஸ்.ஆர்.எம்., பல்கலை வீரர்கள் ரேஷிகா, 19, மற்றும் சத்விக் ரெட்டி, 20, ஜோடி விளையாடியது. இதன் காலிறுதியில் தாய்லாந்து வீரர்கள் தான்வின் மாடீ - நபாபகோர்ன் ஜோடியை 21 - 18, 21 - 17 என்ற புள்ளிகளில் வென்ற ரேஷிகா - சத்விக் ரெட்டி ஜோடி, அரையிறுதியில் இந்திய வீரர்கள் மணீஷா - ராவத் ஜோடியை 14 - 21, 21 - 12, 21 - 19 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினர். இறுதி போட்டி நேற்று நடந்தது. இதில் இந்தியாவின் கே.ஆராதனா - இஷான் பத்நாகர் ஜோடியை 22 - 20, 21 - 08 என்ற நேர் செட் கணக்கில் வென்று, தங்கப் பதக்கத்தை கைப்பற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி