கொங்கு கோப்பையை வென்ற எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி
சென்னை:கல்லுாரிகளுக்கு இடையி லான கொங்கு கோப்பை விளையாட்டு போட்டியில், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கொங்கு பொறியியல் கல்லுாரி சார்பில், மாநில அளவில் கல்லுாரிகளுக்கு இடையே 'கொங்கு கோப்பை - 2025' விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில், மாநிலத்தின் சிறந்த 50 கல்லுாரி அணிகள் பங்கேற்றன. போட்டிகள் முடிந்த நிலையில், 4 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என, மொத்தம் எட்டு பதக்கங்கள் வென்று, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி கைப்பற்றியது.-- போட்டி பிரிவு பதக்கம் டேபிள் டென்னிஸ் மாணவர்கள் தங்கம் டேபிள் டென்னிஸ் மாணவியர் தங்கம் பேட்மின்டன் மாணவியர் தங்கம் பேட்மின்டன் மாணவர்கள் வெள்ளி கூடைப்பந்து மாணவர்கள் வெள்ளி கூடைப்பந்து மாணவியர் வெள்ளி வாலிபால் மாணவர்கள் தங்கம் வாலிபால் மாணவியர் வெண்கலம்