உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி நீச்சல் போட்டியில் சாம்பியன்

எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி நீச்சல் போட்டியில் சாம்பியன்

சென்னை, டிச. 10- தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்த மாநில நீச்சல் போட்டியில், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை மாணவர்கள், 29 தங்கம் உட்பட, 43 பதக்கங்களை கைப்பற்றி அசத்தியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்ட நீச்சல் சங்கம் சார்பில், 2025ம் ஆண்டிற்கான மாநில நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி, தஞ்சாவூர் மாவட்ட நீச்சல் வளாகத்தில் நடந்தது. மாநிலத்தின் அனைத்து மாவட்டத்தை சார்ந்த, 450க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இதில், சென்னையை சேர்ந்த எஸ்.ஆர்.எம்., பல்கலை சார்பில், 14 வீரர் - வீராங்கனையர் போட்டியிட்டனர். போட்டி முடிவில், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி 29 தங்கம், 10 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கம் என, 43 பதக்கங்களை கைப்பற்றி, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. இதில், மவுரிஷ் ஆறு தங்கம்; பவித்ராஸ்ரீ, சபரிகிரிசன் ஆகியோர் தலா நான்கு தங்கம்; ஆனந்தகண்ணன், சரண், குருலால் ஆகியோர் தலா மூன்று தங்கம்; மோனிஷ் குமார், கிருதாகேஷ் ஆகியோர் தலா இரண்டு தங்கம்; ஜெயசூர்யா, சிவஹரி ஆகியோர் தலா ஒரு தங்கப் பதக்கம் கைப்பற்றி அசத்தியுள்ளனர். சென்னை சிறுவனுக்கு வெண்கலம் ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில், 'ஓஷன் மேன்' எனும் கடல் நீச்சல் போட்டி நடந்தது. இதில், மாற்றுத்திறனாளிகளுக்கான இன்ஸ்பிரேஷன் பிரிவு போட்டியில், சென்னையை சேர்ந்த நிகில், 15, பங்கேற்றார். இவர் பங்கேற்ற 'ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர்' பிரிவில், 5 கி.மீ., துாரத்தை 1 மணி நேரம் 40 வினாடி 51 நொடிகளில் நீந்தி, மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை