ஸ்டான்லி ஜி.ஹெச்.,சிற்கு குண்டு மிரட்டல்
ராயபுரம்: ராயபுரத்தில், ஸ்டான்லி அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இதன் மருத்துவ கல்லுாரி நிர்வாகத்திற்கு நேற்று காலை 8:45 மணிக்கு, இ - மெயிலில், 'ஸ்டான்லி மருத்துவமனையில் குண்டு வெடிக்கும்' என மிரட்டல் வந்துள்ளது.வண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார், வெடிகுண்டு சோதனை நிபுணர்களுடன் இரண்டு மணி நேரம், அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொண்டனர். மிரட்டல் வெறும் புரளி எனத்தெரிந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.