உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வி.சி., கட்சி படிப்பகம் மீது கல் வீசி தாக்கியோர் கைது

வி.சி., கட்சி படிப்பகம் மீது கல் வீசி தாக்கியோர் கைது

புதுவண்ணாரப்பேட்டை:புதுவண்ணாரப்பேட்டை, ஆம்ஸ்ட்ராங் தெருவை சேர்ந்தவர் நன்மாறன். வி.சி., கட்சியின் தொழிற்சங்க பொது செயலரான இவர், எம்.பி.டி., காலனி சாலையில் படிப்பகம் நடத்தி வருகிறார்.நேற்று அதிகாலை, மது போதையில் வந்த மர்ம நபர்கள், வி.சி., கட்சியின் படிப்பகத்தை கல்லால் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.இதுகுறித்து நன்மாறன், நேற்று புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்படி, போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.அதில், கூலி தொழிலாளிகளான புதுவண்ணாரப்பேட்டை, அன்னை இந்திராகாந்தி நகர், 6வது தெருவை சேர்ந்த அரவிந்த், 26, காசிமேடு, ஜி.எம்.பேட்டையை சேர்ந்த முருகன், 38, ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது.இருவரையும் புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையம் அழைத்து வந்து நடத்திய விசாரணையில், குடிபோதையில் இருவரும் ஒருவரை ஒருவர் கல்லால் தாக்கிக்கொண்ட போது, வி.சி., கட்சி படிப்பகத்தின் மீது கல் தெரியாமல் பட்டதாக தெரிவித்தனர்.இருவரும் மன்னிப்பு கேட்டதால், நன்மாறன் புகாரை வாபஸ் பெற்றார். இதையடுத்து, இருவர் மீதும் சிறு வழக்கு பதிவு செய்து, காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ