காற்றாடி விட்ட மாணவர் சிக்கினார்
எம்.கே.பி.நகர்: காற்றாடி பறக்க விட்ட கல்லுாரி மாணவர் உட்பட இருவரை, போலீசார் கைது செய்தனர். வியாசர்பாடி, சாஸ்திரி நகர் 6வது நகரில், பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில், மர்ம நபர்கள் காற்றாடி விடுவதாக எம்.கே.பி.நகர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. சம்பவ இடத்தில் போலீசார் ஆய்வு மேற்கொண்டு, அங்கு காற்றாடி விட்ட வியாசர்பாடி, சாஸ்திரி நகர் 9வது தெருவைச் சேர்ந்த தனியார் கல்லுாரி முதலாமாண்டு மாணவரான சரண், 18, விஜய், 25, ஆகிய இருவரையும், போலீசார் நேற்று கைது செய்து, பின் ஜாமினில் விடுவித்தனர்.