பள்ளி மாடியில் இருந்து விழுந்து மாணவர் பலி
திருவொற்றியூர், திருவொற்றியூர், காலடிப்பேட்டையைச் சேர்ந்தவர் பிரவீன், 19. பச்சையப்பன் தெருவைச் சேர்ந்தவர் பூவண்ணன், 24.இருவரும், 'ஏசி' பழுதுபார்ப்பு நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். திருவொற்றியூர் பெரியார் நகரில், அரசு உதவி பெறும் வெள்ளையன் செட்டியார் பள்ளியில், 'ஏசி' பொருத்தும் பணிக்கு, நேற்று சென்றனர்.உதவிக்காக, ஐ.டி.ஐ., முதலாம் ஆண்டு மாணவரான விக்னேஷ், 17, என்பவரை அழைத்து சென்றிருந்தனர். பள்ளியின் முதல் மாடியின் பக்கவாட்டில், 'ஏசி' பொருத்தும் பணியில் மூன்று பேரும் ஈடுபட்டிருந்த நிலையில், மரச் சேரில் நின்று கொண்டிருந்த பிரவீன், விக்னேஷ் ஆகியோர், நிலைதடுமாறி தரை தளத்தில் விழுந்துள்ளனர்.இதில், விக்னேஷ் பலத்த காயமடைந்தார். பிரவீன் லேசான காயமடைந்தார். திருவொற்றியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் விக்னேஷ் உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.