உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மர்ம காய்ச்சலால் மாணவி இறப்பு

மர்ம காய்ச்சலால் மாணவி இறப்பு

சென்னை: காய்ச்சல் காரணமாக, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கல்லுாரி மாணவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி, 17; சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள அழகப்பா தொழில் நுட்ப கல்லுாரியில், பி.டெக்., முதலாம்ஆண்டு படித்து வந்தார். அங்குள்ள விடுதியில் தங்கியிருந்த அவருக்கு, நேற்று முன்தினம் கடுமையான காய்ச்சல் இருந்துள்ளது. இதனால், நந்தனம் சேமியர்ஸ் சாலையில் உள்ள, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி மாணவி ராஜேஸ்வரி உயிரிழந்தார். கோட்டூர்புரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவியின் மரணம் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை