உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பஸ் மோதி மாணவர் பலி

பஸ் மோதி மாணவர் பலி

குரோம்பேட்டை, ஆதம்பாக்கம், சுரேந்தர் நகரை சேர்ந்தவர் சஞ்ஜித் ராஜ், 20. கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.டெக்., மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் ெசன்றபோது,குரோம்பேட்டை ஜி.எஸ்.டி., சாலையில், சஞ்ஜித் ராஜ் மீது தனியார் கல்லுாரி பேருந்து மோதி, பேருந்தின் பின் டயர் ஏறியது. படுகாயமடைந்தை அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி இறந்தார். பேருந்து ஓட்டுனர் வாலாஜாபாத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம், 61 என்பவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ