உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாணவர் கூட்டமைப்பு பேரணி உதயநிதி துவக்கிவைப்பு

மாணவர் கூட்டமைப்பு பேரணி உதயநிதி துவக்கிவைப்பு

ராயபுரம், சென்னை, ராயபுரம், செயின்ட் பீட்டர்ஸ் மைதானம் அருகே, 'யுனைடெட் ஸ்டூடென்ஸ் ஆப் இந்தியா' கூட்டமைப்பின் சார்பில் நடந்த மாணவர் பேரணியை, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி, நேற்று துவக்கி வைத்தார்.இதில், தி.மு.க., மாணவர் அணி, இந்திய மாணவர்கள் சங்கம் உள்ளிட்ட 16 மாணவர் அமைப்புகள் பங்கேற்றன.அமைச்சர் உதயநிதி பேசியதாவது:புதிய கல்விக்கொள்கை, 'நீட்' தேர்வு, 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு போன்றவற்றை தி.மு.க., தொடர்ந்து எதிர்க்கும்.லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி வெற்றி பெற வேண்டும். அது மாணவர்கள் கைகளில் தான் இருக்கிறது. தமிழகத்தில், பா.ஜ., கால் வைக்க முடியாத அளவிற்கு உழைக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.பேரணியில், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.எல்.ஏ.,க்கள் கே.பி.சங்கர், ஐட்ரீம் மூர்த்தி, ஆர்.டி.சேகர் எபினேசர், தாயகம் கவி உட்பட பலர் பங்கேற்றனர். ராபின்சன் பூங்கா அருகே பேரணி நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ