உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  குண்டும் குழியுமான சாலையால் அவதி

 குண்டும் குழியுமான சாலையால் அவதி

அயனாவரம்: அயனாவரம், பால் பண்னை சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். அண்ணா நகர் மண்டலத்திற்கு உட்பட அயனாவரத்தில், குப்புசாமி நகர் மற்றும் குருவாப்பா தெருவை இணைக்கும் பகுதியில், பால்பண்னை சாலை என கூறப்படும் சிறிய தெரு உள்ளது. இச்சாலையை கடந்து தான், அயனாவரம் காய்கறி சந்தை, சோலையம்மன் கோவில் தெரு, நியூ ஆவடி சாலை உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல முடியும். ஆனால் இச்சாலை முழுதும், போக்குவரத்து லாயக்கற்ற நிலையில், குண்டும் குழியுமாக உள்ளது. அவ்வழியாக கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி தவிக்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை