உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பள்ளி மாணவ - மாணவியருக்கு கோடை கால அறிவியல் முகாம்

பள்ளி மாணவ - மாணவியருக்கு கோடை கால அறிவியல் முகாம்

சென்னை, தமிழக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், ஆண்டுதோறும் பள்ளி மாணவ - மாணவியருக்கான கோடை கால அறிவியல் முகாம் நடத்தி வருகிறது.இந்தாண்டு கோடை கால முகாம், மே மாதம் காலை 10:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை, பிர்லா கோளரங்கில் நடத்தப்படுகிறது.இதில், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவ - மாணவியர் பங்கேற்கலாம்.ஆர்வமுள்ளோர், தமிழக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய அலுவலகத்திலும், www.tnstc.gov.inஎன்ற இணையதளம் வாயிலாகவும், தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், ஒவ்வொரு முகாமுக்கும் 50 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். முகாமில் பங்கேற்போர், இன்டர்நெட் வசதியுடன் கூடிய லேப்டாப் கொண்டு வர வேண்டும்.மேலும் விபரங்களுக்கு, 044 - -2441 0025 மற்றும் 044 - -2952 0375 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும் என, அறிவியல் தொழில்நுட்ப மையம் அறிவித்துள்ளது.

முகாம் பற்றிய விவரம்

முகாம்களின் பெயர்கள் நடத்தப்படும் நாட்கள் தகுதியான வகுப்புகள்அறிவியல் முகாம் 7.5.25 - 9.5.25 6 முதல் 10ம் வகுப்புதொலைநோக்கி கட்டுமானப் பட்டறை 10.5.25 8 முதல் 10ம் வகுப்புபோல்ட்ஸ்கோப் பட்டறை 14.5.25 6 முதல் 10ம் வகுப்புரோபோடிக்ஸ் முகாம் 15.5.2025 - 16.5.25 6 முதல் 10ம் வகுப்பு3டி பிரின்டர் முகாம் 21.5.25 - 22.5.25 6 முதல் 10ம் வகுப்பு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி