உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  நீச்சல்: சென்னை சிறுவர் - சிறுமியர் அசத்தல்

 நீச்சல்: சென்னை சிறுவர் - சிறுமியர் அசத்தல்

சென்னை: சென்னையில் நடந்து வரும் மாநில நீச்சல் போட்டியில், சென்னை எஸ்.டி.ஏ.டி., மாணவர்கள் உட்பட சென்னையை சேர்ந்த மாணவ - மாணவியர் தங்கப் பதக்கம் கைப்பற்றி அசத்தியுள்ளனர். தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கம் சார்பில், இருபாலருக்கும் மாநில நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி, வேளச்சேரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி., நீச்சல் வளாகத்தில் நடக்கிறது. இதில், மாநிலத்தில் அனைத்து மாவட்டத்தை சார்ந்த, 200க்கும் அதிகமான மாணவ - மாணவியர் பங்கேற்றனர். இதன் இரண்டாவது நாள் போட்டி நேற்று நடந்தது. இதில், குரூப் 3 சிறுமியர் பிரிவில், முதல் நாளில் இரண்டு தங்கம் வென்ற, சென்னை எஸ்.டி.ஏ.டி., டால்பின் அணியின் ஸ்ரீஹரிணி, 12, 200 மீட்டர் தனிநபர் மெட்லியில் தங்கம் வென்றார். அடுத்து, குரூப் 3 சிறுவர்கள் பிரிவில், முதல் நாளில் ஒரு தங்கம் வென்ற சென்னை ஏசஸ் அணி வீரர் ரோஹித், 12, 100 மீட்டர் பட்டர்பிளை மற்றும் 200 மீட்டர் தனி நபர் மெட்லியில் இரண்டு தங்கத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார். தொடர்ந்து சிறுமியர் 100 மீட்டர் ப்ரீ ஸ்டைல் மற்றும் 200 மீட்டர் ப்ரீ ஸ்டைல் போட்டியில், சென்னை எஸ்.டி.ஏ.டி., அணி வீராங்கனை ஆர்ணா, 17, தங்கம்; குரூப் 2 சிறுவருக்கான 50 மீட்டர் பேக்ஸ்ட்ரோக், 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் மற்றும் 200 மீட்டர் பிரீ ஸ்டைல் பிரிவுகளில், சென்னை எஸ்.டி.ஏ.டி., அணியின் நிகில், 15, ஒரே நாளில் மூன்று தங்கம் வென்று அசத்தினர். பதக்கம் கைப்பற்றிய வீரர் - வீராங்கனையர், ஹைதராபாதில் டிச., 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடக்க உள்ள, 36வது தென் மண்டல நீச்சல் போட்டியில் பங்கேற்கும் தமிழக அணியில் பங்கேற்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ