உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நீச்சல் பயிற்சி முகாம்

நீச்சல் பயிற்சி முகாம்

சென்னை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், கட்டண நீச்சல் பயிற்சி முகாம், அடுத்த மாதம் துவங்க உள்ளது.வேளச்சேரியில் அமைத்துள்ள எஸ்.டி.ஏ.டி., நீச்சல் வளாகத்தில், கோடையை முன்னிட்டு, நீச்சல் பயிற்சி முகாம் வரும் 1ம் தேதி துவங்கி, மூன்று மாதம் நடக்க உள்ளது. இதில் 120 செ.மீ., உயரத்திற்கு மேல் உள்ள 7 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெரியவர்கள் பங்கேற்று பயிற்சி பெறலாம் என, நிர்வாகம் அறிவித்திருக்கிறது. இதற்கு கட்டண தொகையாக 2,360 ரூபாய் வசூலிக்க உள்ளனர். மேலும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, கட்டணத்தில் சலுகைகள் வழங்கப்பட உள்ளதாக நிர்வாகம் அறிவித்திருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை