உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டேபிள் டென்னிஸ் ரோசரி மெட்ரிக் பள்ளி வெற்றி

டேபிள் டென்னிஸ் ரோசரி மெட்ரிக் பள்ளி வெற்றி

சென்னை, தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில், வருவாய் மாவட்ட அளவிலான டேபிஸ் டென்னிஸ் போட்டிகள், தி.நகரில் உள்ள ஜி.ஆர்.டி., பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் துவங்கியது.முதல் நாளான்று, மாணவருக்கான போட்டியில், 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட மூன்று பிரிவுகளில், தனித்தனியாக போட்டிகள் நடந்தன. மொத்தம், 23 குறுவட்டங்களில் வெற்றி பெற்ற மாணவர்கள் பங்கேற்று தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்.நேற்று காலை நடந்த மாணவியருக்கான ஆட்டத்திலும், 14, 17 மற்றும் 19 வயதினருக்கான, தனிநபர் மற்றும் இரட்டையருக்கான போட்டிகள் துவங்கியது. முடிவில், மாணவியருக்கான, 19 வயது பிரிவில், மயிலாப்பூர் ரோசரி மெட்ரிக் பள்ளி முதலிடத்தை பிடித்து அசத்தியது. தொடர்ந்து, அண்ணா ஆதர்ஷ் பள்ளி இரண்டாம் இடத்தையும், சேத்துப்பட்டு 'குட் ெஷப்பர்டு' பள்ளி மூன்றாம் இடத்தையும் பிடித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை