உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தொழில் உரிமத்தை புதுப்பிக்காத கடைகள் நடவடிக்கையில் இறங்கிய தாம்பரம் மாநகராட்சி

தொழில் உரிமத்தை புதுப்பிக்காத கடைகள் நடவடிக்கையில் இறங்கிய தாம்பரம் மாநகராட்சி

தாம்பரம், தாம்பரம் மாநகராட்சியில், தொழில் உரிமத்தை புதுபிக்காத கடைகளுக்கு அதிரடியாக சீல் வைக்கப்பட்டது. உரிமம் புதுப்பிக்காத ௭,000 கடைகளிடம் இருந்து கட்டணம் வசூல் செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தாம்பரம் மாநகராட்சியில், 70 வார்டுகள், ஐந்து மண்டலங்கள் உள்ளன. மாநகராட்சி பகுதிகளில், கடை, உணவு விடுதி, வணிகவளாகம், பல்பொருள் அங்காடிகள் என, 19,000த்திற்கு மேற்பட்ட கடைகள் உள்ளன.இவை தொழில் உரிம சான்றிதழ் பெற்று இயங்குகின்றன. இதற்கான கட்டணம், ஆயிரம் ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை, கடையின் அளவுக்கு ஏற்றார் போல், நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.கடைக்காரர்கள், தொழில் உரிமத்தை, ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க வேண்டும். இந்தாண்டு, 12 ஆயிரம் நிறுவனங்கள் மட்டுமே புதுப்பிக்கப்பட்டுள்ளன. ௭,000 கடைகள் இதுவரை புதுப்பிக்கப்படவில்லை.அதனால், ஐந்து மண்டலங்களிலும் புதுப்பிக்காத கடைகளை கண்டறிந்து, கட்டணம் வசூல் செய்யும் நடவடிக்கையில், சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.உரிமம் புதுப்பிக்காத கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. அதன் பின்னரும் கட்டணம் செலுத்தி, உரிமத்தை புதுபிக்காவிட்டால், அந்த கடைகளுக்கு அதிரடியாக சீல் வைக்கப்படுகிறது. நேற்று காலை, பெருங்களத்துாரில், மாவு அரைக்கும் கடைக்கு சுகாதார அதிகாரிகள் சீல் வைத்தனர். அதனால், தொழில் உரிமத்தை புதுப்பிக்காத கடைகாரர்கள், தாங்களாகவே முன்வந்து, கட்டணம் செலுத்தி உரிமத்தை புதுப்பித்துக்கொள்ளுமாறு மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

எத்தனை கடைகள்

தாம்பரம் மாநகராட்சியில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. ஆனால், மாநகராட்சியில் உள்ள கணக்கின்படி, 19,000 கடைகள் மட்டுமே உள்ளன.அதனால், ஒவ்வொரு மண்டலத்திலும் முழுவதுமாக கணக்கிட்டு, விடுபட்ட கடைகளையும் இணைத்து, தொழில் உரிமம் வசூல் செய்தால், மாநகராட்சிக்கு வருமானம் இன்னும் அதிகரிக்கும்.அதனால், நிர்வாகம் இவ்விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை