உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தாம்பரம் மாநகராட்சி யு - டியூப் துவக்கம்

தாம்பரம் மாநகராட்சி யு - டியூப் துவக்கம்

தாம்பரம் தாம்பரம் மாநகராட்சியில், ஐந்து மண்டலங்கள், 70 வார்டுகள் உள்ளன. இவற்றில், மாநகராட்சி சம்மந்தமாக மேற்கொள்ளப்படும் திட்டங்கள், அதிகாரிகள் ஆய்வு, புதிய பணிகள் துவக்கம், மாநகராட்சி கூட்டம் உள்ளிட்டவற்றை மக்கள் அறிவதற்கு வசதியாக, 'யு - டியூப், வாட்ஸாப்' சேனல்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.'தாம்பரம் கார்ப்பரேஷன்' என்ற தலைப்பில் இந்த சேனல்களை, பொதுமக்கள் காணலாம்.முதற்கட்டமாக, 'வாட்ஸாப்' சேனல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. யு - டியூப் சேனலுக்கான சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.இந்த சேனல்களை பார்ப்பதோடு, பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களையும் தெரிவிக்கலாம். இதேபோல், 'எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டா' போன்ற சமூக வலைதளங்களிலும், தாம்பரம் மாநகராட்சி தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை