உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னை வெளிவட்ட சாலையில் தொழில் பூங்கா திட்டம் இல்லை கைவிட தமிழக அரசு முடிவு

சென்னை வெளிவட்ட சாலையில் தொழில் பூங்கா திட்டம் இல்லை கைவிட தமிழக அரசு முடிவு

சென்னை, சென்னை வெளிவட்ட சாலையில், தொழில் பூங்கா அமைக்கும் திட்டத்தை, தமிழக அரசு கைவிட முடிவு செய்துள்ளது. சென்னைக்குள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், விரைவான போக்குவரத்து சேவைக்கும், வண்டலுார் - மீஞ்சூரை இணைக்கும் வகையில், சென்னை வெளிவட்ட சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இது, 62 கி.மீ., துாரம் உடையது. சென்னையை ஒட்டியுள்ள இந்த சாலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள வண்டலுார், தாம்பரம், படப்பை, பூந்தமல்லி, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்படும் பல தொழிற்சாலைகள், வெளிவட்ட சாலை வழியாக எண்ணுார் துறைமுகத்திற்கு சரக்குககளை அனுப்புகின்றன. இதனால் ஏற்றுமதி, இறக்குமதி, சரக்கு போக்குவரத்துக்கு முக்கிய சாலையாக, சென்னை வெளிவட்ட சாலை உருவெடுத்து வருகிறது. எனவே, வெளிவட்ட சாலையில், 1,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கும் வகையில், 200 ஏக்கரில் தொழில் பூங்கா அமைக்க, 'சிப்காட்' எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனம் திட்டமிட்டது. அந்த பூங்காவுக்கு, வெளிவட்ட சாலையில் ரெட்ஹில்ஸ் அருகில் இடம் கண்டறியப்பட்டது. இந்த இடத்தில் தொழில் பூங்கா அமைப்பது தொடர்பாக, சி.எம்.டி.ஏ., எனப்படும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகளிடம், தொழில் துறை அதிகாரிகள் பேச்சு நடத்தியுள்ளனர். அதில், அடையாளம் காணப்பட்ட இடம் மழை நீர்பிடிப்பு பகுதி என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. வேறு இடங்களில் தொழில் பூங்கா அமைக்க, ஒரே தொகுப்பாக அதிக ஏக்கரில் நிலம் இல்லை என்பது உறுதியாகி உள்ளதால், வெளிவட்ட சாலையில் தொழில் பூங்கா அமைக்கும் திட்டத்தை கைவிட, அரசு முடிவு செய்துள்ளது.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை