உலக கிக் பாக்சிங் 8 பதக்கம் வென்றது தமிழகம்
சென்னை. உலக 'கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப்' போட்டிகள், உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கண்ட் நகரில், கடந்த செப்., 24ம் தேதி துவங்கி 29 வரை, ஆறு நாட்கள் நடந்தன.வயது மற்றும் எடை பிரிவின் கீழ் நடந்த இப்போட்டிகளில், இந்திய அணிக்காக தமிழகத்தில் இருந்து ஆறு வீரர்கள், ஐந்து வீராங்கனையர் என, 11 பேர் பங்கேற்றனர்.ஒட்டுமொத்த போட்டிகளில், இந்திய அணி ஏழு தங்கம், 10 வெள்ளி, 18 வெண்கலம் என, மொத்தம் 35 பதக்கங்களைப் பெற்று, புள்ளிப் பட்டியலில் ஏழாவது இடம் பிடித்தது.இதில், தமிழகத்தில் இருந்து பங்கேற்ற சுபாஷினி 2 தங்கம்; அஸ்வின் ஒரு வெள்ளி; ஜிவந்திகா 2 வெண்கலம்; வசீகரன், நிவேதா, தீபலட்சுமி முறையே தலா ஒரு வெண்கலம் என, மொத்தம் எட்டு பதக்கங்களைக் குவித்தனர்.வெற்றி பெற்ற வீரர்களுக்கு, இந்திய கிக்பாக்சிங் தலைமை பயிற்சியாளர்சுரேஷ் பாபு பாராட்டு தெரிவித்தார்.