உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆசிரியர் சங்கம் செயற்குழு கூட்டம்

ஆசிரியர் சங்கம் செயற்குழு கூட்டம்

நங்கநல்லுார்:சிய ஆசிரியர் சங்கம், செங்கல்பட்டு மாவட்ட செயற்குழு கூட்டம், நங்கநல்லுாரில் நடந்தது.மாவட்ட தலைவர் நாராயணன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், 14 ஆண்டிற்கு மேல் பயிற்சி ஆசிரியர்களாக உள்ளவர்களை நிரந்தர பணியாளர்களாக நியமித்தல், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகை நாட்களுக்கு முன்னும், பின்னும் உள்ள நாட்களை விடுமுறையாக அறிவித்தல், பள்ளிகளுக்கு போதிய உதவியாளர்களை நியமித்தல், உட்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் மாவட்ட செயலர் கீதா, மாநில மகளிரணி இணை செயலர் பூங்குழலி, ஊடக செயலர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை